இலங்கை அணியில் மீண்டும் லசித் மலிங்க! குதுகலத்தில் ரசிகர்கள்!

இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்க இலங்கை அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்காகவே அவர் இலங்கை அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு வருட காலமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத லசித் மலிங்க தற்போது இலங்கை அணியுடன் இணைந்து சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இடம் பெறவுள்ள நிலையில் இலங்கை குழாமில் இணைக்கப்பட்ட லசித் மலிங்க ஆசிய கிண்ண போட்டிகளில் வியைாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.