இலங்கையுடனான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஜப்பான் அதிகாரி இலங்கை விஜயம்

இருநாட்டும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஜப்பான் பிரதமரின் சிறப்பு ஆலோசகர் கென்ரறோ சொனோறா (Kentaro SONOURA) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் அதிகாரி நாளை (வெள்ளிக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இவ்விஜயத்தின் அவர் போது இருநாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஜப்பான்- இலங்கை எல்லை பாதுகாப்பு படையினரின் பயிற்சியின் நிறைவு விழாவிலும் அவர் கலந்துக் கொள்ளவுள்ளார்.

இதேவேளை, முதல் முறையாக முன்னெடுக்கப்படவுள்ள ஜப்பான்- இலங்கை கடற்படை பணியாளர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையிலும் பங்குபற்ற உள்ளார்.

அவரது இந்த விஜயமானது இருநாட்டு உறவை மேலும் வலுவடையச் செய்யும் என எதிர்பார்ப்பதாக ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது.