இலங்கையுடனான உறவை வலுப்படுத்த தயாராக இருக்கின்றோம்- சீனா

இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இலங்கையுடனான பாரம்பரிய உறவுகளை வலுப்படுத்தத் தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில், சீன அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜாவே லிஜியென் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு சீனா வாழ்த்து தெரிவித்ததுடன் சீனப் பிரதமரும் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் 28ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஏனைய நாடுகள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.