இலங்கையில் முதலாம் வகுப்பிலிருந்து பாலியல் கல்வி

160123170806_natasha_balendra_512x288_childprotection.gov.lk_nocreditஇலங்கையில் முதலாம் வகுப்பு தொடங்கி பாலியல் கல்வியை முன்னெடுக்க தேசிய சிறார் அதிகார சபை பரிந்துரை செய்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் வகுப்பு முதல் கட்டம் கட்டமாக பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என அந்த அமைப்பு கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதை அந்த அமைப்பின் தலைவி நடாஷா பாலேந்திரா பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.

பாலியல் கல்வியை பாடசாலை திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்க தாம் நாட்டின் கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் சிறார்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களைதடுக்கும் ஒரு முயற்சியாக உடற்கூறு மற்றும் வாழ்க்கை குறித்த அடிப்படை அம்சங்களை புரிந்து கொள்ளும் வகையில் இந்தப் பாடத்திட்டம் வடிவமைக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறுகிறார்.

சிறார்களுக்கு தமது உடல் அதன் வளர்ச்சி ஆகியவை குறித்த விளக்கத்தை அளிக்க வேண்டியது அவசியம் என்பதை தாங்கள் வலியுறுத்தியுள்ளதாக நடாஷா பாலேந்திரா தெரிவித்தார்.

அப்படியான கல்வியறிவை போதிக்கும்போது, பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன என்பதை சிறார்கள் அறிந்துகொள்ள முடியும் எனவும், அதன் மூலம் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டங்ககளால் மட்டும் சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது எனவும் டாக்டர் நடாஷா பாலேந்திரா தெரிவித்தார்.

பெற்றோர் அல்லது பெரியோர்களும் இது தொடர்பில் சிறார்களுடன் பேசி, புரிய வைக்க வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.

LEAVE A REPLY