இலங்கையில் குழந்தைகள் உட்பட இளைஞர்கள் மீதான பாலியல் சுரண்டல் அதிகரிப்பு -ஐ.நா

இலங்கையில் சுற்றுலா மற்றும் பயணத்துறையில் குழந்தைகள் உட்பட இளைஞர்கள் மீதான பாலியல் சுரண்டல் அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு தெரிவித்துள்ளது.

சிறார்கள் பாலியல் முறைக்கேடுகளுக்கு ஆளாவதில் இருந்து பாதுகாப்பதற்கான கொள்கைகள், இலங்கையில் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பிரிவுகளில் அமுலாக்கப்படவில்லை என்றும் அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு மே 13 முதல் 31 ஆம் திகதி வரையில் பல நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் பிரகாரம் இதனை அறிவித்துள்ளது.

போட்ஸ்வானா, கேப் வெர்டே, கோட் டி ஐவரி, மால்டா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் டோங்கா ஆகிய நாடுகள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.