இலங்கையில் எதிர்வரும் காலங்களில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை எச்சரிக்கை

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் அடக்குமுறைகள் அதிகரிக்கப்படலாமென சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பொதுத்தேர்தலினை தொடர்ந்து இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக முரண்படுபவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரிக்கப்படலாம்.

மேலும், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு சவால் விடுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் அச்சத்தை ஏற்படுத்தும், அச்சுறுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அண்மைக் காலமாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன எனவும் சர்வதேச மனித உரிமை குறிப்பிட்டுள்ளது.