இலங்கையின் வேகம் போதாது! – பிரித்தானியா ஏமாற்றம்

சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றும் விடயத்தில் இலங்கையின் வேகம் போதாது என்று பிரித்தானியா ஏமாற்றம் வெளியிட்டுள்ளது. பிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்ட் இதனை தெரிவித்துள்ளார்.

லண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டின் போது இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இது குறித்து ஆராய்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ‘நான் இலங்கையின் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தேன். சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்தோம். மாற்றம் நிகழும் வேகம் குறித்து பிரிட்டன் ஏமாற்றமடைந்துள்ளது இன்னும் பல நடவடிக்கைகள் இடம்பெறுவது அவசியம் என நான் இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY