இலங்கையின் தற்போதைய நிலைமையில் தொடர்பில் மஹிந்தவிடம் கேட்டறிந்தார் ஜெப்ரி வான் ஒர்டன்!

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றின் இலங்கை நட்பு குழு உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கு வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினர் ஜெப்ரி வான் ஒர்டன் மற்றும் வில்லியம் டார்ட்மவுத்தினை இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்க்கு முன்னர் ஐரோப்பிய நாடாளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியிருந்தபோது, 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மஹிந்த ராஜபக்ஷ போதிய முயற்சிகளை மேற்கொள்ளாமையினையிட்டு தாம் கவலையடைவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.