இலங்கைக்கு நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானம்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.

அதற்கமைய 800 மில்லியன் ரூபாய்களை கடனாக வழங்க அந்த வங்கி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 4 வருடங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி என்ற திட்டத்திற்கே, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் குறித்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இதன்கீழ் வேலை வாய்ப்புக்கள், கிராமபுற பொருளாதார அபிவிருத்திகள், வருமானத்தை அதிகரித்தல் போன்ற வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.