இலங்கைக்கு சீனா இலஞ்சம் வழங்குகின்றது- சுஜீவ குற்றச்சாட்டு

இலங்கையில் வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்காக சீனா இலஞ்சம் வழங்குகிறதென ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சுஜீவ சேனசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் சுஜீவ சேனசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியா, ஜப்பான், ஜேர்மனி போன்ற நாடுகள் வர்த்தக உடன்படிக்கைகளுக்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் வழங்குவதில்லை.

ஆனால் சீனா மாத்திரமே இலஞ்சம் வழங்குகின்றது. அதாவது உடன்படிக்கைகளுக்காக சீனா இலஞ்சம் வழங்குவதன் காரணமாகவே ராஜபக்ஷாக்கள் அடிக்கடி சீனா செல்கின்றனர்.

இவ்வாறான நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் முன்னெடுக்காது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.