இலங்கைக்கான விமான சேவைகளை இரத்து செய்தது குவைத்!

இலங்கை உட்பட 6 நாடுகளுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக குவைத் இரத்து செய்துள்ளது.

அந்நாட்டின் சுகாதார பிரிவினரின் பணிப்புரைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், சிரியா, லெபனான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான விமானங்களுக்கே இவ்வாறு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீர்மானத்தை இவ்வாராம் முதல் அமுல்படுத்தவுள்ளதாக குவைத் அறிவித்துள்ளது.

அத்தோடு குறித்த நாடுகளில் இருந்து வரும் பிரஜைகளை நாட்டிற்குள் அனுமதிக்கும்போது, அவர்களை முழுமையாக பரிசோதனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.