இலங்கைக்கான நோர்வே தூதுவர் வடக்கு ஆளுநருடன் சந்திப்பு

இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோர்ன் கவுஸ்டெசெதர் (Thorbjørn Gaustadsæther), வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நோர்வே தூதுவரின் வடக்கிற்கான விஜயத்தின்போது இன்று (வியாழக்கிழமை) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. யாழிலுள்ள ஆளுநர் செயலகத்தில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் ஆகியன குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.