இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய நிபுணர் குழு யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்தின் இலங்கைக்கான நிபுணர் குழு யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவை சந்தித்தது.

பலாலியில் அமைந்துள்ள யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது ஐக்கிய ராச்சியத்தின் இலங்கைக்கான நிபுணர் குழுப் பிரதானியான ரணில் ஜயவர்தன மற்றும் பாதுகாப்புப் படைத் தளபதியினிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஒருங்கிணைப்பையும் கட்டியெழுப்பும் நோக்கில் இராணுவத்தினரின் செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தால் முன்னெடுக்கப்படுகின்ற மனிதாபிமான செயற் திட்டங்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் இராணுவத் தளபதியால் நிபுணர்குழு பிரதானிகளுக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY