இறுதி வாக்கெடுப்பு – மைத்திரியை சந்திக்கின்றது சுதந்திர கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்

வரவு – செலவு திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.