இறுதி யுத்தம் தொடர்பில் சர்ச்சைக்குரிய இராணுவத் தளபதி கடமைகளைப் பொறுபேற்பு!

பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக அண்மையில் நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்றுதனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும், லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தொடர்ந்தும் இராணுவ தளபதியாக செயற்படுவார் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக செயற்பட்ட அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று குறித்த பதவியில் இருந்து ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

சவேந்திர சில்வா இறுதி யுத்தத்தில் 2009ஆம் ஆண்டு பங்கேற்று பல்வேறு விதமான மனித இனப்படுகொலைக்கு காரணமாக இருந்து சர்வதேச சமூகத்தினால் போர்க்குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

யுத்தம் முடிவுற்று 10 ஆண்டுகளாகியும் இவர் மீது பல்வேறு விதமான போர் குற்றச்சாட்டுக்கள் உலகளாவிய ரீதியில் பல வெளிநாடுகளினால் குற்றம் சாட்டப்பட்டிருந்த சூழ்நிலையில், பல்வேறு மனித உரிமை தரப்புக்களும் இவர் மீது விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என்கின்ற வேண்டுகோள் விடுத்திருந்த சூழ் நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.