இருபது வருவதை ஆட்சியாளர்களே விரும்பவில்லை – எதிர்க் கட்சி குற்றச்சாட்டு!

அரசாங்கத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் 20ஆவது திருத்தத்தை விரும்பவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சியின் நிகழ்ச்சி நிரலை விமர்சிக்கமுடியாதுள்ளது. அவர்கள் அவ்வாறு விமர்சித்தால் அவர்கள் தங்கள் நாடாளுமன்ற இடத்தினை இழப்பார்கள் என்பதே உண்மை.

20ஆவது திருத்தத்தின் மூலம் அமெரிக்க பிரஜைகள் கூட ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கலாம்.

எதிர்க் கட்சியிலிருந்தவேளை பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த தனிநபர்கள் தற்போது பதவிகள் கிடைத்ததும் மௌனமாகிவிட்டனர்.

உத்தேச திருத்தத்தை தோற்கடிப்பதற்கு எதிர்க்கட்சி முயலும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.