இராணுவ உயரதிகாரியிடம் போர்க்குற்றங்கள் குறித்து பிரிட்டன் விசாரணை!

பிரிட்டனுக்கு சென்ற இலங்கை உயர் இராணுவ அதிகாரி ஒருவரிடம் போர்க்குற்றங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முதல் தடவையாக இவ்வாறு இலங்கை படையதிகாரி ஒருவரிடம் பிரிட்டன் போர்க்குற்றங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளனவா என அந்த படையதிகாரியிடம் பிரிட்டன் அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பிரிட்டன் வாழ் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு அமைய இலங்கை படையதிகாரியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது.

போர்க் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் பிரித்தானியாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY