இராணுவப் பிடியில் இருந்த 3 விவசாயப் பண்ணைகள், 1201 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் வசமுள்ள மூன்று விவசாயப் பண்ணைகளை உள்ளடக்கிய 1201.88 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்படவுள்ள காணிகளில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 972 ஏக்கர் அரச காணிகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 120 ஏக்கர் அரச காணிகளும் உள்ளடங்கியுள்ளன.

நாச்சிக்குடா, வெள்ளாங்குளம், உடையார்கட்டுக்குளம் ஆகிய இடங்களில் சிறிலங்கா இராணுவம் நடத்தி வந்த விவசாயப் பண்ணைக் காணிகள் இதில் உள்ளடங்கியுள்ளன.

யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் மேலதிகமாக 46.11 ஏக்கர் அரச காணிகளும், யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் 63.77 ஏக்கர் தனியார் காணிகளும் இன்று சிறிலங்கா அதிபரால் விடுவிக்கப்படவுள்ளனர்.

முல்லைத்தீவில் இன்று இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.