இராணுவத்தின் நல்லிணக்க பொறிமுறை – அமெரிக்க தூதுவர் விசாரிப்பு

நல்லிணக்க நடவடிக்கைளுக்கான சிறிலங்கா இராணுவத்தின் பொறிமுறை தொடர்பாக, அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் விசாரித்துள்ளார்.

நேற்று முன்தினம் சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்குச் சென்ற அமெரிக்கத் தூதுவர், அங்கு சிறிலங்கா இராணுவத் தளபதியைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, சிறிலங்கா இராணுவத்தின் நல்லிணக்க பொறிமுறை, சிவில்- இராணுவ மனிதாபிமான திட்டங்கள், காணிகள் விடுவிப்பு, அபிவிருத்தித் திட்டங்களில் இராணுவத்தின் பங்களிப்பு தொடர்பாக அமெரிக்க தூதுவர் விசாரித்து அறிந்து கொண்டார்.

இந்தச் சந்திப்பில் அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ் மற்றும் தூதரக அதிகாரி ஒருவரும் கலந் கொண்டனர்.