இராணுவத்தினருக்கு எதிராக பொய் பிரசாரம் – மஹிந்த அணி

இராணுவத்திற்கு எதிராக இனவாதிகள் பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக மஹிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது.

பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றுசூழல் அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்தகுழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இராணுவத்தினர் தொடர்பாக புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் இனவாதிகள் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களின் பொய் பிரசாரத்தை தோற்கடிக்க கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

பொலிஸ் சேவைக்கு தமிழ் மூலமான உறுப்பினர்களை உள்வாங்குவது நாட்டின் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்கு பெரும் சக்தியாக அமையும் எனவும் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.