இரத்மலான விமானப்படைத் தளம் அருகே விமானப் பயிற்சிக்கு தடை

இரத்மலான விமானப்படைத் தளத்துக்கு அருகில், விமானம் ஓட்டும் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், சிறிலங்காவில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாகவே, இரத்மலான விமானப்படைத் தளத்தக்கு அருகில் விமானப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமானிகள் பயிற்சிப் பாடசாலைகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தல், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளால் கடிதம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

கட்டுக்குருந்த விமானப்படை தளத்துக்கு தெற்காக மாத்திரமே, விமானப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.