இரண்டாக பிளந்துகிடக்கும் கிரகம்!

13-new-planet4-600சுமார் ஐநூற்று எழுபது ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ‘கன்னி’(Virgo) விண்மீன் கூட்டத்தில் நான்கரை முதல் ஐந்து மணிநேரத்துக்கு ஒருமுறை சிறிதளவு வெளிச்சம் வரும் புதிய கிரகத்தை கெப்லர் கே2 தொலைநோக்கி மூலமாக நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த சிறிய கிரகத்தைத் தொடர்ந்து உற்று நோக்கியதில், இது ஐந்து லட்சத்து இருபதாயிரம் மைல் தொலைவில் உள்ள வொயட் ட்வார்ஃபிலிருந்து (வெண் குறுமீன்) இது விலகி செல்வதாக தெரிந்தது. மேலும், இயல்பிலிருந்து தவறி வால் நட்சத்திரம் போல சரிவாக செல்வதாகவும் ஹாவர்ட்-ஸ்மித்சோனியன் மையத்தில் வானியற்பியல் (ஆஸ்ட்ரோபிசிக்ஸ்) பயின்றுவரும் ஆண்ட்ரூ வேண்டெர்பர்க் என்பவர் கண்டறிந்துள்ளார்.

இந்த சிறிய கிரகத்தின் ஈர்ப்பு விசை, நட்சத்திர ஒளியாலும், பாறைகள் போன்ற பொருட்கள் தொடர்ந்து தாக்குவதாலும் இரண்டாக பிளந்து கிடப்பது கண்கூடாகத் தெரிகின்றது என ‘நேச்சர்’ என்ற புத்தகத்தில் ஆண்ட்ரூ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY