இரணை மடு குளத்திலிருந்து குடாநாட்டுக்கு நீர்விநியோகம்! எனது அமைச்சு நடவடிக்கை எடுக்கும் ரவுப் ஹக்கீம்

i3.phpஇரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாண குடாநாட்டுக்கு நீர்விநியோகம் மேற்கொள்வதற்கு தமது அமைச்சு நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வீடமைப்புத் திட்டங்களின் போது பாரிய முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு பிரச்சினையில் பெருந்தோட்ட நிறுவனங்களின் போக்கை தாம் கண்டிப்பதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்திற்காக தீக்குளிப்பவர்களின் உயிர்களையும் காப்பாற்றும் கடமை தமக்கு இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.

வடக்கில் மேற்கொள்ளப்படும் வீடமைப்புகளில் நியாயமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த வீடமைப்புத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தாவின் கோரிக்கை மீள்குடியேற்ற அமைச்சுக்கு கீழ் வருவதால் அமைச்சர் சுவாமிநாதனிடம் அந்த கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY