இயக்குனரை கரம்பிடித்தார் நடிகை !

marriage_3இயக்குனர் அகத்தியனின் மகளும் பிரபல நடிகையுமான விஜயலட்சுமிக்கும் இயக்குனர் பெரோஸ்க்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று காலை சென்னை மந்தைவெளியில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் கல்யாண மண்டபத்தில் திருமணம் இனிதே நடைபெற்றது.

இவர்களது திருமணத்திற்கு தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். விஜயலட்சுமி-பெரோஸ் ஆகியோரின் திருமண வரவேற்பு இன்று மாலை நடைபெறவிருக்கிறது. இதில் திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் பெரோஸ், கௌரவ் இயக்கிய ‘தூங்காநகரம்’ படத்திலும், அறிவழகன் இயக்கிய ‘வல்லினம்’ படத்திலும் துணை இயக்குனராக பணியாற்றியவர். தற்போது நடிகர் கிருஷ்ணா நடிப்பில் உருவாகும் ‘பண்டிகை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை விஜயலட்சுமி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

kollywood 1

LEAVE A REPLY