இப்படியா ஹர்ட் பண்ணுவீங்க..

பிக் பாஸ் வீட்டில் சென்ற வாரம் கிச்சன் டீமில் இருந்த ரியோ, அனிதா இடையே ஏற்பட்ட மோதல் கமல் தீர்ப்பு சொல்லியும் இன்னும் முடிந்தபாடில்லை.அந்த பருப்பு பிரச்சனையில் ‘சாப்பிட மட்டும் தெரியுமா?’ என்ற மாடுலேஷனில் அனிதா, ரியோவை பார்த்து கிச்சனில் கேட்டது பற்றிய பஞ்சாயத்து நேற்றைய நிகழ்ச்சியில் ஏறக்குறைய நடந்து முடிந்தது.

நீங்கள் கேட்ட விதம் தப்பு என்று மறைமுகமாக கமல் அறிவுரை சொல்லியும் கூட அனிதா அதை விடவில்லை. அவர் அந்த பக்கம் சென்றதும் இந்த பக்கம் ரியோவிடம் சென்று அதுகுறித்து விளக்கம் கேட்டார் அனிதா.

ரியோ-அனிதா இடையே அர்ச்சனா சமரசம் செய்துவைக்க முயல அது முடியாமல் கன்னித்தீவு கதை போல நீண்டது. இதை எதிர்பார்த்தோ என்னவோ மீண்டும் அகம் டிவி வழியாக நிகழ்ச்சியின் உள்ளே வந்தபோது கமல் அதை அறிவிக்கவில்லை. இவர்கள் இருவரின் சண்டையை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். திடீரென அவரை பார்த்து மற்றவர்கள் ஓஓ!! என கத்த அதன் பின்னர் தான் அனிதா-ரியோ இருவருக்கும் அது தெரிந்தது.

மறைமுகமாக ரொம்ப மசிச்சுட்டீங்க என கிண்டலடித்தும் கூட அனிதாவுக்கு அது புரியவில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என அதிலேயே நின்றார். ஒருவழியாக படாதபாடு பட்டு இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் எரிச்சலுடன் ஏன்மா ஒரு பெரிய மனுஷன் அவ்ளோ தூரம் சொல்றாரு அத கொஞ்சம் கூட பாலோ பண்ண மாட்றீங்க? என கேள்வி எழுப்பினர்.