இன்று சிங்கப்பூர் பறக்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரண்டு நாட்கள் பயணமாக இன்று காலை சிங்கப்பூருக்குப் பயணமாகவுள்ளார்.

பிரதமர் செயலக பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எனினும், இந்தப் பயணத்துக்கான காரணம் எதையும் சிறிலங்கா பிரதமர் செயலகம் வெளியிடவில்லை.

சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் வெள்ளிக்கிழமை ரணில் விக்ரமசிங்க நாடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.