இன்னும் சரியான தமிழ் உச்சரிப்பு வரவில்லை – பி.சுசீலா

தமிழ் சினிமாவின் சாதனை பாடகியாக வலம் வந்தவர் பி.சுசீலா. 83 வயதாகும் சுசீலா இசை நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்துகொண்டு வருகிறார்.

சமீபத்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் அவரிடம் பேசியபோது ‘30000, 40000 என்று எண்ணிக்கை சொல்கிறார்கள். என்னிடம் சரியான கணக்கு இல்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென் இந்தியாவில் உள்ள மொழிகளில் எல்லாம் பாடிவிட்டேன்.

பாடுவதை கடவுள் கொடுத்த வரம்னுதான் சொல்வேன். தமிழ்நாடு என்னை அள்ளி அணைத்துக் கொண்ட பூமி. என்னை பொறுத்த வரைக்கும், இன்னைக்கும் என்னோட தமிழ் உச்சரிப்பு சரியானது இல்லை என்றே சொல்வேன். தெலுங்கு வாடை அடிக்கிற தமிழ்தான் அது. மணக்குற தமிழ் என் வாயில இருந்து வரணும்னா நான் இந்த மண்ணுல பிறந்திருக்கணுமோன்னு நினைச்சுப் பார்ப்பேன். பாடினதெல்லாம் சவாலா எடுத்துக்கிட்டுப் பண்ணினதுதான்’ என்று கூறினார்