இன்னும் ஒரே வாரம்தான்.. முழுமையாக குணமடைந்து வீடு திரும்புகிறாராம் ஜெயலலிதா!

i3-phpமுதல்வர் ஜெயலலிதா இன்னும் ஒருவாரத்தில் முழுமையாக குணமடையக் கூடும் என அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 22-ந் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். நுரையீரலில் நீர் கோர்த்ததால் மூச்சு திணறல் இருந்தது. இதற்கேற்ப மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் என பலரும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவுக்கான சுவாச கோளாறு சிக்கல் சிகிச்சை பலனளித்து வருவதாக கூறப்படுகிறது.

நோய் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதால் முதல்வரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. சர்க்கரை, ரத்த அழுத்தத்தின் அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தொடர்ந்து குழாய் மூலமே உணவு வழங்கப்படுகிறது. தற்போதைய நிலை நீடித்தால் இன்னும் ஒரு வாரத்துக்குள் முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து விடுவார் என்கின்றன அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள்.

LEAVE A REPLY