இனிமேல் நாட்டில் சுமூகமான நிலை ஏற்படாது: அநுர எச்சரிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் சாதகமான சூழ்நிலை நாட்டில் நிலவாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலளார் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு பெரும்பான்மை கிடைக்காது, தேர்தலுக்கு பின்னர் நாடு பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும். அரசாங்கத்தினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முடியாத நிலை காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த பின்னர் பொதுத்தேர்தலை நடத்திய போதிலும் மகிந்த ராஜபக்க்ஷவினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முடியாத நிலை காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர்,

அரசாங்கத்துக்கு ஏன் மூன்றில் இரண்டு தேவை என்பது குறித்து கேள்வி எழுப்பவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். .

மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாட்டிற்கு தேவையற்ற கொள்கைகளையே கொண்டுவந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.