இனவாதத்தினைப் பரப்பி மீண்டும் ஆட்சியமைக்க ஐ.தே.க முயற்சி – மஹிந்த அணி

இனவாதத்தினைப் பரப்பி மீண்டும் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சி ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மஹிந்த ஆதரவு அணியின் நாடாளுமன்ற செஹான் சேமசிங்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி இனவாத கருத்துக்களை பிரச்சாரமாக முன்னெடுத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது.

இம்முறையும் அவ்வாறான கருத்துக்களையே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொடர்புப்படுத்தி வெற்றி கொள்ள முயற்சிக்கின்றது.

எவ்வாறெனினும் 2020ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்தை அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது’ என தெரிவித்துள்ளார்.