இந்த ஆண்டு இறுதிக்குள் சீனா- சிறிலங்கா இடையில் சுதந்திர வணிக உடன்பாடு

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு இந்த ஆண்டு கையெழுத்திடடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சீனாவின் சைனா டெய்லி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை மேற்கோள்காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சுதந்திர வணிக உடன்பாட்டை இறுதி செய்வதற்கான ஆறாவது கட்டப் பேச்சுக்கள் கடந்த 2017 மார்ச் மாதம் நிறைவடைந்து விட்டதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சீன சந்தைக்கு சிறிலங்காவின் ஏற்றுமதிகளை விரிவுபடுத்துவதற்கு சிறிலங்கா மிகவும் ஆர்வமாக இருக்கிறது என்று, சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.