இந்த அரசாங்கத்தை நாம் விரைவில் கவிழ்ப்போம் – பசில் ராஜபக்ஸ

இந்த அரசாங்கத்தை நாம் விரைவில் கவிழ்ப்போம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அகலவத்தையில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் புதிய கட்சிக்கு இருபது லட்சம் உறுப்பினர்களை ஒரே தடவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கையிலிருந்து அரிசி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY