இந்தியா-இலங்கை இடையிலான ராஜ்ய உறவுகள் முன்புபோல் இல்லை: இலங்கை வடக்கு மாகாண முதல்வர்

தமிழகம் வந்துள்ள இலங்கை வடக்கு மாகாண முதல் மந்திரி விக்னேஷ்வரன், நெல்லையில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய விக்னேஷ்வரன் கூறியதாவது:- “

இந்தியா போன்ற நாடுகளில் உள்ள இலங்கை தமிழர்களை மீண்டும் அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை மாகாணங்களுக்கான அதிகார வரம்பு குறைவாகவே உள்ளது. அதிகார வரம்பு குறைவால் இலங்கை தமிழ் மக்களுக்கு முன்னேற்றங்களை ஏற்படுத்தவில்லை.

இலங்கை தற்போது சீனாவுடன் வெளிப்படையான நெருக்கம் காட்டுகிறது. சீனாவுடனான நட்பினால், இந்தியா- இலங்கை இடையேயான உறவு முன்பு போல் இணக்கமாக இல்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY