இந்தியா, அமெரிக்கா, புதிய அரசியலமைப்புக்கு எதிராக பௌத்த பிக்கு உண்ணாவிரதம்

DI-P10-10-02-(R)-pdc.qxd
புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

கொழும்பு- புறக்கோட்டை அரச மரத்தடியில், அமத்த தம்ம தேரர் என்ற பௌத்த பிக்குவே இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அத்துடன், இவர் உண்ணாவிரதம் இருக்கும் பகுதியில் கட்டப்பட்டுள்ள பதாதைகளில், சிறிலங்காவில் கடற்படைத் தளம் அமைக்கும் முயற்சிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும், கோரப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒளிப்படத்துடன் கட்டப்பட்டுள்ள பதைதைகளில் இந்தியாவின் தலையீடுகளுக்கு எதிரான வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன.