இந்தியாவுடனான காஷ்மீரின் உறவு முறிந்து விடும் – மக்கள் ஜனநாயக கட்சி எச்சரிக்கை!

Former Jammu and Kashmir Chief Minister Mehbooba Mufti gestures as she addresses a news conference in Srinagar, June 19, 2018. REUTERS/Yawar Nazir Kabli
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதற்கு காரணமான சிறப்பு சட்டப்பிரிவு 35A நீக்கப்படுமானால், இந்தியாவுடனான காஷ்மீரின் உறவு முறிந்து விடும் என்று மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரான மெஹபூபா முப்தி எச்சரித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் ஊடகளவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே மேற்படி எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் எந்த சூழ்நிலையிலும் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தினைக் காக்கப் போராடுவோம்.

சிறப்பு சட்டப் பிரிவு என்பது எங்கள் மக்களுக்கும் சமூகத்திற்கும் வாழ்வா சாவா பிரச்சனை என்றால், ஜனநாயகம் என்பது வாழ்வாதாரம் ஆகும்.

இத்தகைய சூழலில் தேர்தல் நடத்தப்படுவது என்பது, குறிப்பிட்ட அமைப்புகளின் நமபிக்கைத்தன்மையை சிதைப்பதுடன் அவை உருவாக்கப்பட்ட நோக்கங்களையும் கேள்விக்குள்ளாக்குகின்றன.

நாங்கள் ஆட்சியில் இருக்கும் போதே, எந்த காரணத்தின் பொருட்டும் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்துக்கான சிறப்பு சட்டப் பிரிவு 35A நீக்கப்பட்டால், ஆட்சியினை விட்டு வெளியேறி விடுவோம் என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்தோம்.

இந்தியாவுடனான எங்கள் உறவு என்பது அரசியல் சட்டப் பிரிவு 370-ன் வழியிலமைந்துள்ளது. குறிப்பிட்ட சட்டம் நீக்கப்படுமானால், இந்தியாவுடனான காஷ்மீரின் உறவு முடிவுக்கு வந்து விடும்.” என கூறினார்.