இந்தியாவுக்கு 7-வது இடம்; உலகின் மதிப்புமிக்க நாடுகளின் பட்டியல் வெளியீடு

201511011641324804_India-worlds-7th-most-valued-nation-brand-US-on-top_SECVPF.gifஉலகின் மிகப்பெரிய சொத்து மதிப்பீட்டு நிறுவனமான ‘பிராண்டு பினான்ஸ்’ நிறுவனம் உலகின் மதிப்புமிக்க நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்நிறுவனமானது ஒரு நாட்டிற்கான ‘பிராண்டு வேல்யூ’-வை கணக்கிட அந்த நாட்டில் விற்பனையாகும் அனைத்து பிராண்டுகளின் 5 ஆண்டு விற்பனை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.

இதன் அடிப்படையில் இந்தியாவில் மிகச்சிறந்த பிராண்டு ஸ்லோகனாக ‘இன்கிரீடபிள் இந்தியா’ வாசகம் இடம்பெற்றுள்ளது. டாப்-20 நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் மதிப்பு 32 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில், உலகின் மதிப்புமிக்க நாடுகளில் இந்தியாவுக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு ஒரு இடம் முன்னேறியுள்ளது இந்தியா. அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சீனா 2-வது இடத்திலும், ஜெர்மனி 3-வது இடத்திலும் உள்ளது. இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.

பிரிக்ஸ் நாடுகளின் மத்தியில் இந்தியா 2-வது அதிக மதிப்புமிக்க நாடாக உள்ளது. அதற்கடுத்த இடங்களில் பிரேசில், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா நாடுகள் உள்ளன.

LEAVE A REPLY