இந்தியாவின் அக்னி 5 ஏவுகணையின் பரிசோதனை வெற்றிகரமாக நடந்தது

அணுசக்தி ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையின் ஆறாவது பரிசோதனையை இந்தியா, ஒடிசாவின் கடற்கரையோரத்திலுள்ள அப்துல்கலாம் தீவில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

முன்னதாக கடைசி பரிசோதனை கடந்த ஜனவரி மாதம் 18-ம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று காலை 9.48 மணியளவில் இந்த பரிசோதனை நடைபெற்றுள்ளது.

அக்னி 5 ஏவுகணையானது 5,000 கிமீ தொலைவிற்கும் அதிகமாக சென்று தாக்கும் வல்லமை திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விண்ணில் செலுத்தப்பட்ட ஏவுகணையின் செயல்திறனானது ரேடார் போன்ற கண்காணிப்பு கருவிகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY