இத்தனை படங்களில் நடிப்பேன் என்று நினைக்கவில்லை – ஸ்ரீதிவ்யா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜீவா, காக்கி சட்டை, வெள்ளைக்காரதுரை, இஞ்சி இடுப்பழகி, பென்சில், மருது உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா, இன்று திரைக்கு வந்துள்ள சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து ஒத்தைக்கு ஒத்த படங்களில் நடித்து வருகிறார். நடித்த சில படங்களின் தோல்வி காரணமாக அவரது மார்க்கெட் டல்லடிப்பது போன்று தெரிகிறது.

இதுபற்றி ஸ்ரீதிவ்யா கூறுகையில், சினிமாவில் ஒரு படம் ஓடினால் பரபரப்பாக பேசுவார்கள். இரண்டு படம் ஓடவில்லையென்றால் மார்க்கெட்டே அவுட் என்பார்கள். அதனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது. தற்போது ஈட்டி படத்திற்கு பிறகு அதர்வாவுடன் நான் நடித்துள்ள ஒத்தைக்கு ஒத்த, ஜீவாவுடன் நடித்துள்ள சங்கிலி புங்கிலி கதவ தொற ஆகிய இரண்டு படங்களும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அதனால் இந்த படங்கள் வெளியாகும்போது மீண்டும் நான் பரபரப்பான நடிகையாகி விடுவேன்.

மேலும், தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டேன். தொடர்ந்து எல்லா நடிகர்களுடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. முக்கியமாக சூர்யா, தனுஷ் எனக்கு பிடித்தமான ஹீரோக்கள். அதனால் அவர்களுடன் நடிப்பதற்கு அதிக ஆர்வமாக உள்ளேன் என்று கூறும் ஸ்ரீதிவ்யா, சினிமாவில் நான் நடிகையானபோது இத்தனை படங்களில் இவ்வளவு பெரிய நடிகர்களுடன் நடிப்பேன் என்று நினைக்கவேயில்லை, என் வாழ்க்கையில் நான் நினைக்காதது எல்லாமே நடக்கிறது என்கிறார்.

LEAVE A REPLY