இதொகாவும் கோத்தாவுக்கு ஆதரவு – மகிந்த அமரவீர

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரும் அதிபர் தேர்தலில், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

மலையக தோட்ட சமூகத்தின் வாக்குகளை கோத்தாபய ராஜபக்சவுக்கு பெற்றுக் கொடுப்பதை உறுதி செய்வதற்கு, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், இந்த முடிவு தொடர்பாக இதொகா இன்னமும் அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.