இடைத்தேர்தல் குறித்த தி.மு.க.வின் நிலைப்பாடு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது – தினகரன்

திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த தி.மு.க.வின் நிலைப்பாடு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது என அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இது போன்ற செயல்பாடுகளால் தான் அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வருவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து அங்கு கருத்து தெரிவிக்கும் போதே தினகரன் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“இடைத்தேர்தலை கண்டு ஸ்டாலின் அச்சப்படுகிறார். திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்று ஏற்கனவே வழக்கு தொடுத்த ஸ்டாலின், இப்போது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் சொல்கிறார்.

திருப்பரங்குன்றத்தில் இதற்கு முன்பாக நவம்பர் மாதத்தில் தான் இடைத்தேர்தல் நடைபெற்றது. எனவே மழையை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளி வைத்திருப்பது என்பது சரியான நடைமுறை இல்லை.

மேலும், இவர்களுக்கு துணிவு இருந்தால் தேர்தலை நடத்தி வெற்றிபெற வேண்டுமே அன்றி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது.” என கூறினார்.