இடைக்கால அறிக்கை தொடர்பாக தமிழ்மக்களுக்கு விளக்கமளிகவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு!

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பாக தமிழ் மக்கள் பேரவை மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இவ்வறிக்கை தொடர்பாக ஆராய நாளை தமிழ் மக்கள் பேரவை யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடுகின்றது.

இடைக்கால அறிக்கையில் ஒவ்வொரு கட்சியும் தமது பின்னிணைப்பை இணைத்துள்ள நிலையில், பெரும்பான்மைக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தமது பின்னிணைப்பில் ஒற்றையாட்சியையே வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், நாளை இடம்பெறவுள்ள கூட்டத்தின் பின்னர் இடைக்கால அறிக்கை தொடர்பாக தமிழ் மக்கள் பேரவை அதிகாரபூர்வமாக தமது நிலைப்பாட்டை வெளியிடும் எனவும் உடனடியாகவே பொதுமக்களுக்கு வழிப்பூட்டும் கூட்டங்களை அரம்பிக்கவுள்ளதாகவும் தமிழ் மக்கள் பேரவையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழரசுக் கட்சியைத் தவிர மற்றையகட்சிகள் எதிர்ப்பைத்தெரிவித்தாலும், அதற்கெதிராக ஒன்றிணைந்துசெயற்படுவதில் எந்த இணக்கமும் ஏற்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY