இடைக்கால அரசாங்கத்திற்கு வாய்ப்பில்லை – லக்ஷ்மன் கிரி­யல்ல

மக்களால் நிராகரிக்கப்பட்ட குழுவால் ஆட்சியமைக்க முடியாது, அத்தகையை குழுவுடன் இணைய நாம் தயாரில்லை என சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும், பிரதமரும் நாட்டில் இல்லாத நிலையில், மாற்று அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கு முயற்சிக்கப்பட்டுவருவதாகவும், இரண்டு அணிகள் இணையபோவதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் இன்று(செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்தநிலையில் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“நல்லாட்சி அரசாங்கத்திற்கே மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, மக்களால் நிராகரிக்கப்பட்ட குழுவால் அதை செய்யமுடியாது. அவ்விரு அணிகளும் இணையும் என்று நாம் நம்பவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.