இங்கிலாந்து மந்திரிசபையில் மாற்றம் பிரதமரின் முடிவை எதிர்த்து கல்வி மந்திரி விலகல்

ஜஸ்டின் கிரீனிங் அந்த முடிவை ஏற்க மறுத்து பதவி விலகி உள்ளார். இதற்கான கடிதத்தை அவர் பிரதமர் தெரசா மேயுக்கு அனுப்பிவைத்தார்.

அதில் அவர், மந்திரிசபைக்கு வெளியே இருந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து உள்ளார்.

புதிய கல்வி மந்திரியாக டேமியன் ஹிண்ட்ஸ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். எஸ்தர் மெக்வேயுக்கு பணியாளர், ஓய்வூதியத்துறை மந்திரி பதவி அளிக்கப்பட்டு உள்ளது.

மேத் ஹான்காக் கலாசார மந்திரியாகி உள்ளார்.

உடல்நலக்குறைவை காரணம் காட்டி வடக்கு அயர்லாந்து மந்திரி ஜேம்ஸ் புரோக்கன் ‌ஷயர் பதவி விலகி உள்ளார். அவரது இடத்துக்கு கரேன் பிராட்லி வந்துள்ளார்.

சர் பேட்ரிக் மெக்லாலின் வகித்து வந்த கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் பதவி நீர்ப்பாசனத்துறை மந்திரி லெவிசுக்கு தரப்பட்டுள்ளது.

நீதித்துறை மந்திரி டேவிட் லிதிங்டன், காபினட் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.

மந்திரிசபை மாற்றத்தில் உள்துறை மந்திரி ஆம்பர் ரூட், ‘பிரிக்ஜிட்’ துறை மந்திரி டேவிட் டேவிஸ், வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் துறைகளில் கை வைக்கப்படவில்லை.

LEAVE A REPLY