ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா போல அமைந்துள்ளது- மு.க. ஸ்டாலின்

எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

ஆளுநர் உரையில் தமிழக அரசின் கடன் சுமை குறித்து எதுவும் இல்லை . அரசுக்கு வருவாய் குறைந்துள்ளது என்பதை ஆளுநர் உரையில் ஒத்துக்கொண்டுள்ளனர்.வருவாய் இல்லாத போது, திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த முடியும்?

விவசாயிகளின் கோரிக்கை, வேலைவாய்ப்பின்மை ஆகியவை குறித்த எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை.

உரை தொடங்கியதுமே ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் மத்திய அரசு தயாரித்த உரையைத்தான் ஆளுநர் படித்தாரோ என்ற சந்தேகம் கூட எழுகிறது என ஆளுநரின் உரையை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.

LEAVE A REPLY