ஆறுமுகம் தொண்டமான் யாழிற்கு விஜயம் – சி.வி.யுடன் சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின்போது பல்வேறு தரப்பினரருடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.

இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு சென்ற அவர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன்பின்னர் கோயில் வீதியில் உள்ள முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரனுடைய இல்லத்திற்கு சென்று அவருடன் கலந்துரையாடியிருந்தார்.

இச்சந்திப்பினை முடித்துக்கொண்ட அவர் யாழ்.இந்திய துணைத் தூதுவர் எஸ்.பாலச்சந்திரனையும் சந்தித்து கலந்துரையாடினார்.