ஆர்.கே நகர் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு 59 வேட்பாளர்கள் போட்டி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்திருந்த வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது பல்வேறு புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை இத்தகைய சர்ச்சைகள் ஏற்பட்டது இல்லை. இதனால் விஷால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரம் விவாத மாக மாறியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட 131 பேர் 145 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான நேரம் இன்று நிறைவு பெற்றது.

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. நடிகர் விஷால், ஜெ.தீபா உட்பட 73 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஏற்கப்பட்ட 72 மனுக்களில் 14 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்த 4 பேர் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் 59 வேட்பாளர்கள் உள்ளனர்.

LEAVE A REPLY