ஆர்ஜன்டீனாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் !

சர்வதேச நாணய நிதியத்தின் தூண்டுதலில் ஆர்ஜன்டீனாவின் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக சேவைகள் அமைப்பு இணைந்து புவனோஸ் ஐரிஸ் நகரில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்ஜன்டீனா அரசாங்கம் திட்டமிட்டுள்ள பொருளாதார கொள்கைகள், நாட்டு மக்களின் வருமானத்தின் பெறுமதியைக் குறைப்பதோடு பணவீக்கத்தையும் உயர்த்தியுள்ளதாகக் தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது தொடர்ந்து எதிர்வரும் 25ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இழந்த வெளிநாட்டு முதலீடுகளைத் திருப்பிப் பெறுவதற்கான முயற்சியாகவே குறித்த பொருளாதாரக் கொள்கைகள் இயற்றபட்டுள்ளதாக ஜனாதிபதி மௌரீசியா மெக்ரீ குறிப்பிட்டுள்ளார்.

இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் பொருளாதார பின்னடைவை சந்தித்தக் கொண்டிருக்கும் வேளையில், ஆர்ஜன்டீனாவும் விதிவிலக்கின்றி பொருளாதார நெருக்கடியில் அவதியுற்று வருகிறது.

ஆர்ஜன்டீனா தற்போது தங்கள் நாணயத்தில் 31 சதவீதம் பணவீக்கத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.