ஆயுதபூஜைக்கு எத்தனை படங்கள்?

ஆயுத பூஜை விடுமுறையை குறிவைத்து ஏகப்பட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. இந்தப்பட்டியலில் இருந்த வேலைக்காரன் டிசம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே பட்டியலில் இருக்கும் கருப்பன், ஸ்பைடர் ஆகிய படங்களுடன் இப்போது மேலும் அரைடஜன் படங்களும் ஆயுதபூஜை ரீலீஸ் என அறிவித்துள்ளன.

நயன்தாராவின் ‘அறம்’, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘செம’, சந்தானம் நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’, கௌதம் கார்த்திக்கின் ‘ஹர ஹர மஹாதேவகி’ ஆகிய படங்கள் அதிகாரபூர்வமாகவே செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக அறிவித்துவிட்டன.

இந்தப் படங்களுடன் ஜெய்யின் ‘பலூன்’, அர்விந்த்சாமியின் ‘சதுரங்கவேட்டை 2’ படங்களையும் இதே தேதியில் திரைக்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. கடைசி நேரத்தில் இந்த பட்டியலில் இருந்து எந்தெந்த படங்கள் பின்வாங்கும் என்பது தெரியவில்லை. என்றாலும் ‘சர்வர் சுந்தரம்’ , ‘ஹர ஹர மஹாதேவகி’ ஆகிய இரண்டு படங்களும் பின்வாங்க வாய்ப்பிருப்பதாக திரைத்துறையில் பேச்சு அடிபடுகிறது.

LEAVE A REPLY