ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலைகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 22 போலீசார் பலி

ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்தின் தெற்கு பகுதியிலுள்ள காவல்துறை நிலைகளை குறிவைத்து நேற்று இரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு காவல்துறை தரப்பிலும் பதில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

இரு தரப்பினருக்கும் சில மணி நேரம் நீடித்த துப்பாக்கிச்சண்டையில் போலீஸ் தரப்பில் 22 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்தியது தாலீபன் பயங்கரவாதிகள் என்று தெரிவித்த உள்ளூர் போலீஸ் அதிகாரி, பயங்கரவாதிகளில் 45 பேர் கொல்லப்பட்டதாகவும் 35 காயம் அடைந்ததாகவும் தெரிவித்தார்.

உள்ளூர் எம்.பி காலித் பஸ்துன், கூறுகையில் போலீஸ் தரப்பில் 37 பேர் கொல்லப்பட்டதாகவும் 30 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவித்தார். இந்த தாக்குதல் குறித்து தலீபான் பயங்கரவாதிகள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அண்மைக்காலமாக ஆப்கான் அரசு படைகளுக்கு எதிராக தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY