ஆதரவு வழங்கவில்லை என்பதற்காக தமிழ் மக்களை வேறுபடுத்த முடியாது- செஹான்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரவு வழங்கவில்லை என்பதற்காக அவர்களை வேறுபடுத்தி பார்க்க முடியாதென இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

தற்போதைய புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். செஹான் சேமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “இடைக்கால அரசாங்கத்தில் மக்களுக்கு தேவையான முறையான சேவை முன்னெடுக்கப்படும்.

மேலும் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான அபிவிருத்திகளே முன்னெடுக்கப்படும். அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரவளிக்கவில்லை என்பதற்காக அவர்களை ஒருபோதும் ஒதுக்கமாட்டோம்.

வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பாலான மக்கள் மாறுப்பட்ட பல கடன் திட்டங்களில் அகப்பட்டு பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். நுண்கடன் திட்டங்களில் நெருக்கடியுள்ளாகியுள்ளோருக்கு அரசாங்கம் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

மேலும் எதிர்வரும் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவுக்கே தமிழ் மக்கள் அனைவரும் தங்களின் ஆதரவினை வழங்குவார்கள் என்பது உறுதி” என குறிப்பிட்டுள்ளார்.